திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் மற்றும் தங்க கோயிலைப் பார்வையிடவும் வருகின்ற 10ஆம் தேதி குடியரசுத் தலைவர் வேலூர் வருகிறார்.
இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருடன் ஆலோசனை நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.