ராணிப்பேட்டை : தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது . இதை யொட்டி , மாநிலம் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது . 

மேலும் , அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . 

இந்நிலையில் , மாவட்டங்கள்தோறும் ரவுடிகளின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு , அவற்றில் உள்ளவர்களை கண்காணித்து வந்தனர் . இதைதொடர்ந்து , மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை தொடர்ந்து போலீசார் கைது செய்து வருகின்றனர் . அதன்படி , ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் , சோளிங்கர் , ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது . 

இங்கு , தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் , சீர்குலைக்க முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சிவக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார் . மேலும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும் பணிகளில் போலீசார் மும்முரமாக ஈடுப்பட உத்தரவிட்டார் . 

அதன்பேரில் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத் தம் 46 ரவுடிகள் இருப்பது கண்டறியப்பட்டது . அவற்றில் , 30 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் 16 ரவுடிகளை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகின்றனர் .