ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதிபெறாத வாகனங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்றும் , போலீசில் புகார் தெரிவித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது , ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரக்கோணம் , சோளிங்கர் , ராணிப்பேட்டை , ஆற்காடு உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் 72 பறக்கும் படையினர்் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து 3 ஷிப்ட்கள் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஒரு தொகுதியில் மொத்தம் 18 குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . தேர்தல் நடத்தை விதிகளையொட்டி எந்த அரசியல் கட்சி வாகனத்திலும் அனுமதி பெறாமல் உள்ள கட்சிக்கொடியை அகற்ற வேண்டும் .
அனுமதி பெறாமல் வாகனங்களில் கட்சிக்கொடி வைத்திருந்தால் அதன் ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .