மாரடைப்பால் காலமான மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் ராணிப்பேட்டையில் பிரசாரம் முடித்து, மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்ற நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனையடுத்து ஈக்கா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிராத்னை மற்றும் சடங்குகள் செய்யப்பட்டன. பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு, அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இறுதி சடங்கில் அமைச்சர் கே.சி.வீரமணி, ராணிப்பேட்டை வேட்பாளர் சுகுமார், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.


21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முகமது ஜான் உடல் நல்லடக்கம்