தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள 35 வாக்குறுதிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. அதில் சில...

* மதுரை தெற்கு தொகுதியில் 10 பேர், 100 நாட்கள் சுற்றுலா பயணமாக நிலவுக்கு அழைத்து செல்லப்படுவர்.

* இதற்காகவே தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.

* மதுரை தெற்கு தொகுதி மக்கள் அனைவருக்கும், 'ஐ-போன்' வழங்கப்படும்.

* உலகம் வெப்பமயம் ஆவதால், 300 அடி உயர செயற்கை பனி மலை உருவாக்கப்படும்.

* விடுமுறை நாட்களில் மக்கள் பொழுது போக்க செயற்கை கடல் உருவாக்கப்படும்.

* இல்லத்தரசிகளுக்கு, வீட்டு வேலை செய்ய, 'ரோபோ' வழங்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம்.

* போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு, ஒரு படகு வழங்கப்படும். என்று 35 வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு உள்ளார்.