ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் செலவின பார்வையாளராக சேதன் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகை தந்த அவர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணம் இல்லாத 18004255669 அல்லது 1950 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். மேலும், சி-விஜில் செல்போன் செயலி வழியாக புகார் அளித்தால் புகார் வரப்பெற்ற 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், அலுவலக பொது மேலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.