ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று முதல் மாஸ்க் இல்லாமல் காரில் செல்வோருக்கு 500 ரூபாய் அபராதம் பைக்கில்  செல்வோருக்கு 300 
வேலூர் மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் தொகையை அதிகரித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே இரு சக்கர வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்கள் அபராதத் தொகையாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது, தற்போது ரூ.300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று முதல் மாஸ்க் இல்லாமல் காரில் செல்வோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.