பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது சில நாட்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது. தற்போது நாளொன்று 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் துறை ரீதியிலான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் அவர், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இனி முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்கள் மீது அபராதம் விதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். அரசின் விதிமுறைகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றதா மற்றும் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா என்பன உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை, காவல் துறை உள்ளிட்ட துறை ரீதியிலான அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்திரவு பிறப்பித்துள்ளார்.