தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி வடக்கு மண்டல தலைவர் நரேஷ் குமார் வேலூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு இளைஞர் கட்சி தலைமை அறிவித்துள்ளது.