பிரபல நடிகர் அமிர்கானுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமீர்கானின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், " அமிர்கான் கோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார். தற்போது நலமுடன் உள்ளார். அண்மைகாலமாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவருடைய வாழ்த்துகளுக்கும் அக்கறைக்கும் நன்றி எனக் கூறப்பட்டுள்ளது.