குறள் : 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

மு.வ உரை :
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

கலைஞர் உரை :
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை :
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

Kural 302
Sellaa Itaththuch Chinandheedhu Sellitaththum
Iladhanin Theeya Pira

Explanation :
Anger is bad even when it cannot injure; when it can injure; there is no greater evil



கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்
05-03-2021, மாசி 21, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 07.55 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அனுஷம் நட்சத்திரம் இரவு 10.37 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் இரவு 10.37 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் - 05.03.2021

மேஷம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தள்ளி வைக்கவும். பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்
இன்று வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்
இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

கன்னி
இன்று உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும்.

துலாம்
இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும்.

தனுசு
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பிரச்சினைகள் பெரிய மனிதர்களின் உதவியுடன் சுமூகமாக முடியும்.

மகரம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை கூடும்.

கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.