சார்வரி வருடம் மாசி 4, செவ்வாய்க்கிழமை, February 16, 2021 பஞ்சாங்கம்

திதி : 05:46 AM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : ரேவதி 08:56 PM வரை பிறகு அஸ்வினி
யோகம் : சுபம் 01:49 AM வரை, அதன் பின் சுப்ரம்
கரணம் : பவம் 04:38 PM வரை பிறகு பாலவம் 05:46 AM வரை பிறகு கௌலவம்.

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:34 AM

சூரியஸ்தமம் - 6:11 PM

சந்திரௌதயம் - Feb 16 9:35 AM

சந்திராஸ்தமனம் - Feb 16 10:04 PM

அசுபமான காலம்

இராகு - 3:17 PM – 4:44 PM

எமகண்டம் - 9:28 AM – 10:55 AM

குளிகை - 12:23 PM – 1:50 PM

துரமுஹுர்த்தம் - 08:53 AM – 09:40 AM, 11:08 PM – 11:57 PM

தியாஜ்யம் - 07:19 PM – 09:06 PM

நல்ல நேரம்:- 

காலை 6.30am- 7.30am

மாலை 4.30pm- 5.30pm


மாசி 04 - செவ்வாய்
வங்கி தொடர்பான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகள் குறையும். வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் காரியவெற்றி உண்டாகும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவதன் மூலம் ஒற்றுமையும், ஆதரவும் மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


சித்திரை :வாய்ப்புகள் கிடைக்கும்.

சுவாதி : செலவுகள் ஏற்படும்.

விசாகம் : ஆதரவான நாள்.


விருச்சகம்
பிப்ரவரி 16, 2021

மாசி 04 - செவ்வாய்
குடும்ப உறுப்பினர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமும், திருப்திகரமான வாய்ப்புகளும் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அலைச்சலுக்கு பின்பு ஈடேறும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


விசாகம் : தெளிவு கிடைக்கும். 

அனுஷம் : திருப்திகரமான நாள். 

கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


தனுசு
பிப்ரவரி 16, 2021

மாசி 04 - செவ்வாய்
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான செயல்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனம் அமைதியான சூழ்நிலையில் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுகளால் தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான நிலை அகலும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மூலம் : முன்னேற்றமான நாள். 

பூராடம் : இழுபறிகள் அகலும். 

உத்திராடம் : லாபம் மேம்படும்.


மகரம்
பிப்ரவரி 16, 2021

மாசி 04 - செவ்வாய்
திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். நவீன தொழில்நுட்பம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு வாய்ப்புகளையும் தகுந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் புதிய மாற்றத்தை உருவாக்க இயலும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இன்றி அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


உத்திராடம் : திட்டங்கள் ஈடேறும். 

திருவோணம் : மேன்மையான நாள். 

அவிட்டம் : நன்மைகள் அதிகரிக்கும்.


கும்பம்
பிப்ரவரி 16, 2021

மாசி 04 - செவ்வாய்
குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் சம்பந்தமான செயல்பாடுகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகளும், சில நேரங்களில் அலைச்சல்களும் ஏற்படும். மனதில் சுதந்திர மனப்பான்மை மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அவிட்டம் : செயல்பாடுகள் மேம்படும். 

சதயம் : முதலீடுகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


மீனம்
பிப்ரவரி 16, 2021

மாசி 04 - செவ்வாய்
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். தனவரவுகள் எதிர்பார்த்த விதத்தில் கிடைத்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமாக இருக்கும்


வாழ்க வளத்துடன் நீலகிரி ரவிக்குமார் மதுரை