2021 - 22க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுவிட்டது. தமிழகத்தின் சில பகுதிகளில் 90 ரூபாய் வரை பெட்ரோல் விற்கப்படுகிறது. பிறபகுதிகளில் ரூ.83 முதல் ரூ90 வரை விற்கப்பட்டு வருகிறது.
இதற்கான வரிகள் குறைக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்த கூடுதல் வரி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இந்த கூடுதல் வரியினால் விலையில் மாற்றம் இருக்காது என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது அறிவிப்பின் படி இந்த கூடுதல் வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னையைப் பொருத்தவரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.88.82 க்கும், டீசல் லிட்டர் 81.71 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.