வாலாஜா சோளிங்கர் சாலையில் எம்.சாண்ட் ஏற்றி சென்ற லாரி நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்து.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வாலாஜாபேட்டை சோளிங்கர் சாலையில் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது, அந்த சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த எம்சாண்ட் முழுவதும் சாலையில் கொட்டியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்
மேலும் சாலையில் கிடந்த லாரி ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் சாலையின் ஓரத்துக்கு அப்புறப்படுத்தினர், இந்த விபத்து காரணமாக வாலாஜாபேட்டை சோளிங்கர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது