ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே கரும்பு ஏற்றிச்சென்ற லாரியிலிருந்து கரும்புகள் கட்டுக்கட்டாக சாலையில் விழுந்து விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி கரும்புகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, ராணிப்பேட்டை இராஜேஸ்வரி திரையரங்கம் கடந்து வந்த போது எதிர்பாராத விதமாக லாரியில் அதிக அளவில் கட்டப்பட்டிருந்த கரும்புகள் சரிந்து சாலையில் கொட்டியது.

பாதை முழுவதும் சிதரியதை அடுத்து  போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் லாரியில் இருந்து கொட்டப்பட்ட கரும்புகளை மீண்டும் ஏற்றும் பணி  நடைபெற்றது.