ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சிறுகரும்பூர் கிராமம் மீனவர் தெரு சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் கோபிகிருஷ்ணா (வயது 12). காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சேைலயில் கழுத்து இறுகி மயங்கி விழுந்தான். 

அதை பார்த்த பெற்றோர் கோபிகிருஷ்ணாவை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து கோபிகிருஷ்ணா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.