சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை விழிப்புணர்வு பஸ் கண்காட்சியை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று தொடங்கி வைத்தார். 
ராணிப்பேட்டை , பிப் .2 : சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை விழிப்புணர்வு பஸ் கண்காட்சி நேற்று தொடங்கியது . இதனை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து கழக வேலூர் மண்டல துணை மேலாளர் ( தொழில்நுட்பம் ) நடேசன் , பொன்னுபாண்டி ( வணிகம் ) , இணைமேலாளர் கருணாகரன் , வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் முருகேசன் , ராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி , இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த கண்காட்சி பஸ் , ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி முத்துக்கடை , அம்மூர் , வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள் முன் நிறுத்தப்பட்டது . இதை ஏராளமான பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.