வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டை SP மயில்வாகனன் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோட்டில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டார்.
மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் எனவே அது ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் தைரியமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த முன்னுதாரணமான நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.