ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புட்டுத்தாக்கு அண்ணாநகரைச் சேர்ந்த பிரசாந்த்(25). இவருக்கும், சென்னை ஆவடியைச் சேர்ந்த இந்துமதி(23) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டுப் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது. திருமணமானது முதல் இந்துமதி தனது கணவருடன் மாமனார், மாமியார் வீட்டில் தனி போர்ஷனிலிருந்து வந்தார். 

இந்நிலையில் இந்துமதி, பிரசாந்திடம் தனி வீடு பார்க்கச் சொல்லியுள்ளார். அதற்குப் பிரசாந்த் தற்போது வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த இந்துமதி வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவலின் பேரில் ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் விசாரணை செய்து வருகிறார்.