ராணிபேட்டை: பானாவரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

 
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் ராமாரெட்டி மகன் பெருமாள் (48) திருமணமாகி ஒரு மனைவி இரண்டு மகன்கலுடன் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.பெருமாள் வழக்கமான தனது விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இரவு வீட்டில் லைட் எரியவில்லை இதனால் அருகில் உள்ள மின்மார்ரியில் சரிசெய்ய சென்ரவர் மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏர்படுத்தியுள்ளது.பானாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.