அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று அங்குமிங்குமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தது . இந்த நாய் அப்பகுதியை சேர்ந்த சுமார் 10 க்கும் மேற்பட்டோரை நேற்றுமுன்தினம் கடித்து குதறியது . 
இதில் , காயமடைந்தவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றனர் . இதையடுத்து , அப்பகுதிமக்கள் வெறிநாயை துரத்தி அடித்தனர் . 

இந்நிலையில் , வெறிநாய் தொல்லையிலிருந்து அப்பகுதி மக்கள் விடுபடவில்லை அச்சத்துடனே காணப்படுகின்றனர் . எனவே , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு பொதுமக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .