ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்கள், சுயதொழில் புரிபவர்கள் பணிக்குச் செல்பவர்கள் வேலையில்லா பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கு 2020 21 ஆம் நிதியாண்டின் பொது திட்டத்தின் கீழ் கைப்பேசி பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 87 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் வழங்கினார்.