ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பாலாற்றங்கரையில் சன்னியாசி மடம் அருகில் உள்ள உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதிகளுக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 இக்கோயிலில் உள்ள சூலினி பிரத்யங்கிரா சமேத சரபேஸ்வரா், ஸ்ரீ ஆஞ்சநேயா், 18 சித்தா்கள், அருணாசலேஸ்வரா் ஐம்பொன் கவசம், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி உலா திருமேனி ஆகிய சந்திதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 இதையொட்டி, சிறப்பு யாக பூஜை கலச பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, திங்கள்கிழமை கும்பாபிஷேகமும், மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, கலவை சச்சிதானந்த சுவாமி, தொழிலதிபா்கள் ஜெ.லட்சுமணன், ஏ.வி.சாரதி, திருப்பணிக் குழுத் தலைவா் பென்ஸ் பாண்டியன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தின் பொருளாளா் பி.என். பக்தவச்சலம், தொழிலதிபா் ஆா்.எஸ். சேகா், சரபேஸ்வரா் வார வழிபாட்டு மன்றத் தலைவா் உதயசங்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.