மணல் கடத்தியவர் கைது : 
ஆற்காடு டவுன் எஸ்ஐ சுரேஷ் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தாழனூர் இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது , அவ்வழியாக வந்த மாட்டுவண்டியை சோதனைக்கு நிறுத்தினர். 

போலீசாரை கண்டதும் வண்டியில் அமர்ந்து வந்த 2 பேர் தப்பியோடினார் . போலீசார் விரட்டிச்சென்றதில் ஒருவர் பிடிபட்டார் . விசாரணையில் , அவர் தாழனூர் இந்திரா நகரை சேர்ந்த அஜய் ( 26 ) என்பதும் , மாட்டுவண்டியில் மணல் கடத்தியதும் தெரியவந்தது . அவரை கைது செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர் . தப்பியோடிய யுவராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.