குறள் : 276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

மு.வ உரை :
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.

கலைஞர் உரை :
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

சாலமன் பாப்பையா உரை :
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

Kural 276
Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu
Vaazhvaarin Vankanaar Il

Explanation :
Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart falsely take the appearance of those who have forsaken (it)
இன்றைய பஞ்சாங்கம்
07-02-2021, தை 25, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.48 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 04.14 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 04.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். 
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00, 


இன்றைய ராசிப்பலன் - 07.02.2021

மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உங்கள் ராசிக்கு மாலை 4.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். 

கடகம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.

கன்னி
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

துலாம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும்.

தனுசு
இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க கூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மன நிம்மதி குறையும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் பண விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம்.

கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,