ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் டிரான்ஸ்பர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார் . 

சோளிங்கர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த ஜெயபிரகாஷ் , வாலாஜா தாசில்தாராகவும் , அங்கு பணியில் இருந்த பாக்கியநாதன் , நெமிலி தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் , அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் நிலம் எடுப்பு திட்ட தாசில்தார் சுமதி , நெமிலி தாசில்தாராகவும் , நெமிலியில் இருந்த ராஜராஜசோழன் , சோளிங்கர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் , நெமிலி சமூக பாதுகாப்பு திட்ட தாசில் தார் கந்தீர்பாவை , அரக்கோணம் சிப்காட் பனப்பாக்கம் நிலம் எடுப்பு திட்ட தாசில்தாராகவும் , கலவை தேர்தல் துணைதாசில்ததார் வசந்தி , ராணிப்பேட்டை நகர நிலம் எடுப்பு திட்ட தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .