சென்னையிலிருந்து ஆரணி நோக்கி டிராபிக் ராமசாமி சென்றுகொண்டிருந்தார். திமிரி பஸ் ஸ்டேண்டு அருகே சென்றபோது அமமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் கண்டு திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4 அமமுக பேனர்களை அகற்றி, பேனர் வைத்த திமிரி நகர அமமுக செயலாளர் கேசவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.