ராணிபேட்டை: கொலை மற்றும் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள இரண்டு இளைஞர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதன் காரணத்தினால் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஓம்பிரகாஷ் ஆகிய இருவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக ஓராண்டுக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராஸ்டன் புஷ்பராஜ் அவர்களிடம் பரிந்துரை செய்தார்.

பரிந்துரையி்ன் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அவர்கள் இருவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக இருவரையும் ஒராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கான உத்தரவு ஆணையை வழங்கியுள்ளார் இந்த உத்தரவு ஆணையைக் காவல் துறையினர் சிறைத் துறையினரிடம் வழங்கினர்.