குறள் : 268
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
மு.வ உரை :
தவ வலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
கலைஞர் உரை :
தனது உயிர் என்கிற பற்றும், தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்.
சாலமன் பாப்பையா உரை :
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
Kural 268
Thannuyir Thaanarap Petraanai Enaiya
Mannuyi Rellaan Thozhum
Explanation :
All other creatures will worship him who has attained the control of his own soul
இன்றைய பஞ்சாங்கம்
30-01-2021, தை 17, சனிக்கிழமை, துதியை திதி இரவு 10.13 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மகம் நட்சத்திரம் பின்இரவு 02.28 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பின்இரவு 02.28 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,
எமம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00,
பகல் 10.30-12.00,
மாலைை 05.00-07.00.
இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 30.01.2021
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிட்டும். திடீர் பயணங்கள் உண்டாகும். தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். பேச்சில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் ஏற்படலாம். தடைப்பட்ட காரியம் கைகூடும் வாய்ப்பு அமையும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளித்தாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் காணப்படும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் பணவிரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.
மகரம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
மீனம்
இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
cell: 0091 7200163001. 9383763001,