குறள் : 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
மு.வ உரை :
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.
கலைஞர் உரை :
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.
Kural 265
Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum
Explanation :
Religious dislipline is practised in this world because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)
இன்றைய பஞ்சாங்கம்
27-01-2021, தை 14, புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 01.17 வரை பின்பு பௌர்ணமி. புனர்பூசம் நட்சத்திரம் பின்இரவு 03.49 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 27.01.2021
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். செலவுகள் குறைந்து சேமிக்க முடியும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.
கன்னி
இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.
தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மகரம்
இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தாராள தன வரவால் கடன்கள் குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வண்டி வானகங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
Today rasi palan - 27.01.2021
இன்றைய ராசிப்பலன் - 27.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,