குறள் : 256
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
மு.வ உரை :
புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால் விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
கலைஞர் உரை :
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை :
தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
Kural 256
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril
Explanation :
If the world does not destroy life for the purpose of eating then no one would sell flesh for the sake of money
இன்றைய பஞ்சாங்கம்
16-01-2021, தை 03, சனிக்கிழமை, திரிதியை திதி காலை 07.46 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 06.09 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின் இரவு 06.09 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சதுர்த்தி விரதம். கரி நாள். காணும் பொங்கல்.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 16.01.2021
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். பெண்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். மாற்று கருத்துடையவர் மனம் மாறுவர். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் வீண் விரையங்கள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும்.
கடகம்
இன்று குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானத்துடன் செல்ல வேண்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெற்று கடன் பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். நெருங்கியவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும். சேமிப்பு உயரும்.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் பெண்களுக்கு வேலைபளு குறையும். புதிய பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
மீனம்
இன்று நீங்கள் திட்டமிட்ட காரியம் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
Today rasi palan - 16.01.2021
இன்றைய ராசிப்பலன் - 16.01.2021
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
cell: 0091 7200163001. 9383763001,