வாலாஜா: வாலாஜாபேட்டை பேருந்நிலையத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஸ்பராஜ் துவக்கி வைத்தார்.

வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் வாலாஜாபேட்டை சில்க் சிட்டி அரவிந்தன் சிலம்பம் தேசிய பயிற்சி பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய கலையான சிலம்பத்தை வளர்க்கும் வகையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் 200 க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.