ராணிபேட்டை: கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கததால் ஏமாற்றமடைந்தனர்.
ராணிப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் இலவச அரிசி வெல்லம் போன்ற பொருட்களை  வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

இதனால் கட்டுமான தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை 8 மணி முதல் ராணிப்பேட்டை நவல்பூர் கங்காதர மேல்நிலைப்பள்ளி வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் கூட்டம் அதிகமானதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து மாலை இரண்டு மணிக்கு மேல் வழங்குவதாகத் தெரிவித்தனர் இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.