பல்வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யா என்ற இளம்பெண் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட சத்யா என்ற பெண் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் சத்யாவின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அவரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிலாஸடின் புஷ்பராஜ் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நடத்திய அவை ஓர் ஆண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஏற்கனவே வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யாவிடம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர்.