தக்காங்குளம் கிராமத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் முனைவர் கோ நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் இணையும் அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தக்காங்குளம் கிராமத்தில் உள்ள கே எம் இயற்கை வழி வேளாண்மையில் இன்று காலை 9 மணிக்கு முனைவர் கோ நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவஞ்சலியும் அவர்களது திருவுருவப் படத்திற்கு தொண்டைமண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே எம் பாலு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள்.

ஆனந்தகுமார் உதயசங்கர் மற்றும் இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்