ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஷ்டிக் பொருட்களை விற்பனை செய்கின்ரனர். பாலிதின், கவர், டம்லர் போன்றவற்றை மீண்டும் தாராளமாக விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தடிநீர் மாசுபடுவதாலும் மற்றும் மண்ணில் மக்கும் தன்மையை கடினமாக இருப்பதால் தமிழக அரசாங்கம் கடந்த வருடத்திற்கு முன் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. 

இதன்படி மைக்ரான் அளவு குறைவாகக் கொண்ட பிளாஷ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என தமிழக அரசாங்கம் ஆணை பிறப்பித்தது. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள்மீது பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தடைசெய்யப்பட்ட பொருளை விற்பனை செய்வதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என கெடுபிடியாக சோதனைகள் செய்ததில் பிளாஷ்டிக் பயன்பாடு குறைந்து கொண்டே வந்தது.

இதனைக் கடைபிடிக்காமல் தற்போது மீண்டும் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஷ்டிக் பொருட்களை மீண்டும் வெளிப்படையாக வெகுஜோராக விற்பனை செய்து வருகின்றனர். இதன் பின்னால் பல பகீர் காரணங்களும் சொல்லப்படுகிறது. பல அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.

எனவே மண்ணை மலட்டு தன்மை ஆக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடைசெய்யப்பட வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.