ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கிளாஸ்டன் புஷ்பராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இதனைத் தொடர்ந்து அரசு துறைகள் மற்றும் மருத்துவத் துறையில் சிறந்த பணியாற்றிய நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முகக் கவசங்கள் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.