ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ட்ரீட் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது. வாலாஜாபேட்டை உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மாரத்தான் போட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை திமுக மாவட்ட கழகச் செயலாளருமான ஆர் காந்தி கலந்து கொண்டு மாரத்தான் போட்டியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மாரத்தான் போட்டியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.