ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயிலில் 10ஆம் ஆண்டு விழா, கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில், கணபதி ஹோமத்துடன் துவங்கி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

உஷ பூஜை, கலச பூஜை, மஹா ம்ருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன மேலும் சிறப்பு பூஜைகளைத் சபரிமலை தலைமை தந்திரி பிரம்மஸ் ஸ்ரீ கண்டரு மகேஸ்வரரு தந்திரி நல்லாசியுடன் பிரம்மஸ் ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி நல்லாசியுடன் நடைபெறுகிறது.

மேலும் இதில் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சிறப்பு பூஜைகளும் யாகங்களும் அபிசேகங்களும் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்குக் கலைமாமணி வீரமணி ராஜு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.