திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மர்ம நபர்களால் இளங்கலை பட்டதாரி கணித ஆசிரியரைக் கத்தியால் வெட்டி உயிர் இருக்கும்போதே தலைமீது காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பங்களாமேடு பகுதியில் மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு பொதுமக்கள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல்கூற விரைந்து வந்த காவல் துறை .சடலத்தைக் கைப்பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் கூற சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (33). இவர் ஊத்தங்கரை அருகே உள்ள ஜோதி நகர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் இளங்கலை பட்டதாரி கணித ஆசிரியராகக் கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார் என்றும் இவருக்கு விக்டோரியா என்கிற மனைவியும் ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவி விக்டோரியா போச்சம்பள்ளி பகுதியில் கணினி மையம் வைத்து நடத்தி வந்துள்ளார். சிவகுமார் எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது மொபைலில் பேசிக் கொண்டிருப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில் நாட்றம்பள்ளி பங்களாமேடு பகுதியில் சிவகுமாரின் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சரமாரியாகக் கத்தியால் வெட்டி அரைகுறை உயிர் இருக்கும் பொழுதே தலைமீது காரை ஏற்றிக் கொலை வெறியாட்டம் செய்து தூக்கி வீசிச் சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாட்றம்பள்ளி காவல்துறை சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.