கலவை கமலக்கண்ணி அம்மன் கோயிலில் 11 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று தங்ககவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் நேற்று 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கலவை சச்சிதானந்தா சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார் . விழா முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர் . அனைவருக்கும் வெப்ப அளவு பரிசோதிக் கப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டது