வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகின்ற தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதன் அடிப்படையில்19ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

நீண்ட நாட்களாகப் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளதால் பள்ளி வளாகங்களில் வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவு மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அறிவுறுத்தல் பேரில் பள்ளிகளில் லைசால் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குச் சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தனியார் பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.