சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய சிறை தண்டனையானது வருகிற 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதித்த பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், இருமல் இருப்பதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.