திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் இயன்முறை மருத்துவராகக் கமலக்கண்ணன் பணிபுரிந்து வருகிறார்.

அவர் தான் பணிபுரியும் அரசு மருத்துவமனையிலேயே தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்துக்கொண்டார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவரைப் பாராட்டி அரசு சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார்.