ராணிப்பேட்டையில் வீதிகள் தோறும் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

ராணிப்பேட்டை நகரத்தில் தெருக்கு தெரு நாய்கள் உள்ளன. தெருவில் சுற்றித்திரியும் இந்த நாய்கள் கிடைத்த உணவை சாப்பிடுகின்றன . ஓட்டல்கள் , கோழி இறைச்சி கடைகளின்கழிவுகளை சாப்பிட்டு கொழுத்து திரிகின்றன. இதில் கோழிக்கழிவுகளை தொடர்ந்து சாப்பிடும் நாய்களில் சிலவற்ற்றுக்கு சொறி பிடிக்கிறது.

இதனால் நகரத்தில் பல இடங்களில் நடந்து செல்வோர் , சைக்கிள் , பைக்கில் செல்வோரை வெறிநாய்கள் துரத்திச்சென்று கடித்து குதறுவது வாடிக்கையாகி விட்டது . கடந்த நவம்பர் மாதம் ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துகுதறியது. இதில் பாதிக்கப்பட்ட முதியவர் பன்னீர்செல்வம் என்பவர் இன்னும் பூரண குணமாகாமால் கையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ராணிப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ஒருவரை நாய் கடித்து அவர் சிகிச்சையில் இருக்கிறார்.

இப்படியாக நகரத்தில் நாய்கள் தொல்லை தாங்கமுடியாத அளவில் இருக்கிறது . இதுகுறித்து நகராட்சி கமிஷனரிடம் கேட்டதற்கு நாய்களை பிடித்து கருத்தடை செய்வற்கு டெண்டர் கோரியுள்ளோம் . மேலும் வெறிநாய்களை பிடிக்க கலெக்டரிடம் சிறப்பு அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் . 

நகராட்சி கமிஷனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . நாய்களிடமிருந்து மக்களை காக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது .