ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் அதிமுக-வின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் ரவி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் சோளிங்கர் ஒன்றிய செயலாளர் பழனி, அரக்கோணம் நகர செயலாளர் பாண்டுரங்கன் முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், கிளைகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதற்கடுத்து அரக்கோணம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார்.