ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள மேலகுப்பத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(35) . லாரி டிரைவரான இவர் அமமுக கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார் . மேலகுப்பம் அமமுகவைச் சேர்ந்த ராஜா என்பவர் கட்சி சார்பில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து பஸ் நிறுத்தம் அருகில் பேனர்வைத்துள்ளார்.
இதைக் கண்ட அறிவழகன் பேனரில் எனது பெயரை ஏன் போடவில்லை என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் ராஜா தனது நண்பர்கள் அய்யப்பன் , ராகவேந்திரன் , உதயசூரியன் ஆகியோரை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு அறிவழகன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜா அறிவழகனை ஆபாசமாக பேசி கத்தியால் சரமாரியாக வெட்டிகொலை மிரட்டல் விடுத்தாராம் . மேலும் உடன் வந்த மூன்று பேரும் கல்லாலும் கையாலும் தாக்கியுள்ளனர் . இதில் படுகாயம் அடைந்த அறிவழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அறிவழகன் ரத்தினகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார்செய்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து ராகவேந்திரனை ( 34 ) கைது செய்தார் . மேலும் ராஜா உட்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார் .