வேலூர் காட்பாடி அடுத்த அறுப்பு மேடு பகுதியில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பிச்சைக் காரர் தலையில் கல்லைப் போட்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.


இதுதொடர்பாகத் தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்ததில் கிழித்தான் பட்டறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரிதிவிராஜ் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.