அரக்கோணம் , ஜன . 26 : சோளிங்கரில் உள்ள தனியார் கம் பெனியில் இருந்து நேற்று காலை உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அரக்கோணம் அம்பேத்கர் நகர் வழி யாக சென்றபோது , சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டு பாதாள சாக்கடையில் லாரியின் பின்பக்க சக்கரம் புதைந்து சிக்கியது . இதனால் அரக்கோணம் - திருவள்ளூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


அரசு பஸ் , தனியார் பஸ் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தது இதனால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் , பள்ளி , கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர். 

மேலும் , விபத் தில் சிக்கிய லாரியை மீட்டனர் . இதனால் , அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக் குவரத்து பாதிக்கப் பட்டது .