ராணிப்பேட்டை: ரத்தினகிரி முருகன் கோயிலில் தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஆற்காடு அடுத்த ரத்தனகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தை கிருத்திகையையொட்டி  முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் பழமையானது, இக்கோயிலின் தை கிருத்திகையையொட்டி வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தை கிருத்திகையையொட்டி சிவ காளி திருக்கோயிலை சேர்ந்த மோகனந்து சுவாமிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தை கிருத்திகையையொட்டி முருகப்பெருமானை வழிபட்டனர்.